திருக்குறள்

756.

உறுபொருளும் உல்கு பொருளுந்தன் ஒன்னார்த் தெறுபொருளும் வேந்தன் பொருள்.

திருக்குறள் 756

உறுபொருளும் உல்கு பொருளுந்தன் ஒன்னார்த் தெறுபொருளும் வேந்தன் பொருள்.

பொருள்:

வரியும், சுங்கமும், வெற்றி கொள்ளப்பட்ட பகை நாடு செலுத்தும் கப்பமும் அரசுக்குரிய பொருளாகும்.

மு.வரததாசனார் உரை:

இறையாக வந்து சேரும் பொருளும், சுங்கமாகக் கொள்ளும் பொருளும், தன் பகைவரை வென்று திறமையாகக் கொள்ளும் பொருளும் அரசனுடைய பொருள்களாகும்.

சாலமன் பாப்பையா உரை:

வாரிசுதாரர் இல்லாமல் வந்த பொருள் வெளிநாட்டு பொருட்களுக்கு விதிக்கப்படும் வரி தன் பகைவர் தனக்குக் கட்டும் கப்பம் என்னும் இவை எல்லாம் அரசிற்கு உரிய பொருள்களாம்.